நேற்று மாலை வேளச்சேரியிலிருந்து சென்னைப் பல்கலைக்கழகம் சென்றுகொண்டிருந்தேன். மனைவி `இளங்கலை தமிழ் இலக்கியம்' படிக்கிறாள். ஆன்லைன் தேர்வு நடைபெறுவதால், தேர்வுத்தாளைச் சமர்ப்பிக்கத்தான் இப்பயணம்.
Saturday, April 23, 2022
போலிகளை எதிர்கொள்வதுதான் பெரும் சவால்
Thursday, April 21, 2022
பலகீனங்களின் மேல் சவாரி செய்யும் சமூகத்தில்
Wednesday, April 20, 2022
பற்றி எரியும் அப்பாவின் கனவு!
தம்மைப் போல் பண்ணையடிமையாய்த் தம் பிள்ளைகளும் வாழ்ந்திடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் அப்பா. மேலும், எல்லா பிள்ளைகள் மீதும் ஒருவித வெறுப்பைத் தொடர்ந்து காட்டி வந்தார். இதனால், இரண்டு விசயங்கள் நடந்தன. ஒன்று வெறுப்பைத் தாங்காமல் ஊரை விட்டுப் பிள்ளைகள் ஓடுவது ; மற்றொன்று படிப்பு என்கிற சொல்லில் விடுதியில் சேர்த்து விடுவது. மூத்த அண்ணன் முதல் ரகம் ; இளைய அண்ணன் இரண்டாம் ரகம். ஆனால், தம் பிள்ளைகள் பெரிய ஆளாக வர வேண்டும் என்கிற கனவை மூட்டையாய்ச் சுமந்தபடியே இருந்தார். அக்கனவு எதுவென்று சுட்டுவிரல் நீட்டவோ, அக்கனவை நோக்கிக் கைக்கூட்டி அழைத்துச் செல்லவோ, அக்கனவைச் சொற்களால் விளக்கவோ அவரால் இயலவில்லை. ஆனால், தீராக் கனவு அதிகாலைச் சூரியனைப் போல் சுடர்விட்டுக்கொண்டே இருந்தது.
Tuesday, April 19, 2022
உடைந்த வளையல் வானத்தின் கீழ்...
Sunday, April 17, 2022
என்னதான் பார்க்கிறாய் கணேஷா!?
நாளை சீக்கிரம் எழுந்திருக்க வேண்டுமென்று முடிவெடுத்திருந்தேன். இங்கு சீக்கிரம் என்பது விடிவதற்குள். அப்போதுதான் பூசனம் பிடித்த சோற்றை யாருக்கும் தெரியாமல் கீழே கொட்ட முடியும். பூசனம் பிடித்தது சோறு மட்டுமல்ல ; சாம்பார், பால், பொறியலும்கூட. இவற்றுடன் மனமும்தான். மனதின் பூசனத்தைப் பிறகு எழுதுகிறேன்.
தமிழ்ப் புத்தாண்டு அன்று சமைத்தது. காலையில் நண்பரைப் பார்க்கச் சாப்பிடாமல் சென்றதில் மனைவிக்குக் கோபம். என்ன செய்வது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இருக்கும் அவரைப் பார்த்து, இப்போது சினிமாவில் ரொம்ப பிஸியாகி விட்டார். மேலும், 9.30 இல் இருந்து 10 மணிக்குள் வந்துவிடுங்கள் என்றதால் சீக்கிரம் புறப்பட்டு விட்டேன்.
Thursday, April 14, 2022
தன் குஞ்சைச் சூரியனில் காய வைப்பவன்
ஓர் நாள் கிழிந்த டவுசரின் வழியே கருத்த பிண்டம் ஒன்று எட்டிப் பார்த்தது. என்னடா இது என்று அதன் நுனியைத் தொட்டுக் கேட்டேன். வெட்கப்பட்டுக் கைகள் இரண்டால் பொத்திக்கொண்டு ஓடி விட்டான். சமீப நாட்களாகத்தான் கிழிந்த ஆடைகளை அணிந்த பிள்ளைகளைக் கவனிக்க ஆரம்பித்தேன். குடும்பத்தின் மேல் என்ன அக்கறை கொண்டுள்ளோம் என எழுந்த கேள்வி புதுத் துணி வாங்கிக் கொடுக்க நினைத்தது.
Wednesday, April 6, 2022
பழக்கமற்ற ஒன்று முதலில் மூச்சுமுட்டவைக்கும் தானே!?
நேற்று இரவு கீழறைக்கு உறங்கச் சென்றேன். பிள்ளைகளில் யாராவது ஒருவரை உங்களுடன் அழைத்துச் செல்லலாம் அல்லவா. காலையில் இருந்து கூடவே இருக்காங்க, கொஞ்ச நேரம் அசைய முடியவில்லை. எப்பப் பாரு சாப்பிட உக்காரும் போது, டாய்லட் வருது என்கிறான். பாத் ரூம் போனாலும் கூடவே வருகிறான். தூங்கும் போதும் ரெண்டு பேரும் இறுக்கி அணைத்துக்கொள்கிறார்கள், இடுப்பும் முதுகும் வலிக்கின்றன என்றாள். மகனை உடன் தூங்க அழைத்தேன் வர மாட்டேன் என்று சொல்லிவிட்டான். என்ன செய்வது என்று தெரியாமல் தனியாக தூங்கச் சென்று விட்டேன். ஆனால் ஏதோவொன்று என்னைத் தொந்தரவு செய்தபடியே இருந்தது.
காலை 4 மணிக்கு எழுந்து எழில் சின்னதம்பி மொழிபெயர்த்த `கடைசி வருகை' மொழிபெயர்ப்புச் சிறுகதை நூலில் தலைப்பிட்ட கதையைத் தெரிவு செய்து படித்தேன். மிக விசித்திரமான கதை. கருப்பையில் சுமக்கப்படாத ஒருவன், ரத்தமும் சதையும் எலும்புமற்ற ஒருவன் பேசியபடியே இருப்பான். அவன் மற்றவரின் கனவில் தோன்றுபவன். கனவில் மட்டுமே உயிர் வாழும் அவனின் குரல் கனத்தை ஏற்படுத்தியது. அதற்கு அடுத்து வேறு ஒரு கதைக்கு நகர முடியவில்லை. இது ஒன்றே போதுமென மீண்டும் உறங்கச் சென்று விட்டேன்.
காலையில் எழுந்தால் வழக்கம் போல் கதவைத் தட்டி அப்பா, அம்மா உங்களைப் பால் வாங்கி வரச் சொன்னாங்க என்றான். இன்று உங்களுக்குப் பள்ளிக்கூடம் இருக்கிறதா என வினவினேன். இல்லை என்றான். சரி பால் வாங்க வேண்டாம் வெளியில் செல்வோம் என்று, மனைவியை செல்போனில் அழைத்தேன். அவள் அழைப்பை எடுப்பதற்குள் எங்கு செல்வது என்று யோசித்து, இன்று பார்த்தசாரதி கோயிலுக்குச் செல்வோம் கிளம்புங்க என்றேன்.
வீட்டில் குடிக்க வேண்டிய காபியைக் `கோத்தாஸ் காபி' கடையில் குடிக்கலாம் என்று திட்டமிருந்தது. ஆனால், பேருந்தில் சென்றால் ரயில் நிலையத்திற்குச் செல்ல, பேருந்து நிறுத்தத்தில் இருந்து அதிக தூரம் நடக்க வேண்டும். எனவே, ஓலா ஆப்பில் ஆட்டோ புக் செய்தேன். 43 ரூபாய் கட்டணம் காட்டியது. குடும்பத்துடன் ஓலாவில் புக் செய்து போவது இதுதான் முதல்முறை. கிருஷ்ணர் கோயில் வாசலில் வந்து நின்ற ஆட்டோவில் ஏறி வேளச்சேரி ரயில் நிலையத்திற்குச் சென்றோம்.
Tuesday, April 5, 2022
நவீன இலக்கியத்தின் சிந்தனை வறட்சி!?
Monday, April 4, 2022
எனக்கே என்னை அருவருப்பூட்டுகிறது
நேற்று மாலை ஏதாவது எழுதலாம் என்று அலுவலகம் வந்திருந்தேன். எண்ணற்ற விசயங்கள் இருந்தாலும் மனம் ஒரு முகப்படவில்லை. மாத இறுதியைக் கடக்க நண்பர்களின் ஏடிஎம் இல் கைவைக்கும் சூழல் ஒருவிதக் குற்றவுணர்வுக்குத் தள்ளி விடுகிறது. ஒரு வழியில் ஒவ்வொரு மாதமும் உதவி கிடைத்தாலும் அதற்காக நான் மேற்கொள்ளும் பிரயத்தனங்கள் என்மேல் எனக்கே அருவருப்பூட்டுகிறது. அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது அல்லவா. பிறருக்கு உதவ நினைக்கும் மனம் தொடர்ந்து உதவியை நாடியபடியே இருப்பது கசப்பான வரலாறுதானே. அனைவருக்கும் கடனைத் திருப்பித் தரும் நாள்தான் சுயமரியாதையோடு வாழ இயலும் என்று நினைக்கிறேன். முக்கியமாக அம்மாவுக்குச் செலவுக்குப் பணம் அனுப்ப வேண்டும். தள்ளாத வயதில் ஆடுமேய்த்து அவளும் அவ்வப்போது என் மாதக் கடைசியைத் தாங்குகிறார்.
Saturday, April 2, 2022
உன் ஸ்டோரி சொல்கிறது `பச்சோந்தி, you need a hug'
என் ஞாபகம் உனக்கு இன்னும் இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால், உன் நினைவுகள் சதா என்னை எரிக்கின்றன. யாருக்கோ நீ இடும் லைக்ஸ்களை விட ஹார்ட்டின்களையே அதிகம் எண்ணுகிறேன். கமென்ட்களில் நீ இடும் வார்த்தைகளில் சற்று நேரம் தேங்கி நின்றுவிடுகிறேன். வாசமற்ற பூங்கொத்துகளில் உன் வாசம் மட்டும் தீர்வதேயில்லை. க்ளிக் செய்தால் பூக்கும் அம்மலர்களின் இதழ்களில் ஒன்றைப் பறிக்க முடியவில்லை. செவ்விதழ்களின் வரிகளில் மஞ்சளாறு பாய்கிறது. இந்த வர்ணனை உனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று நினைக்கிறேன். நெற்றிப் பொட்டில் கடலைச் சூடியவள். நகங்களில் வானவில்லை உடுத்தியவள். ஃபேஸ்புக்கில் மரபின் மழலை நீ, வாட்ஸ் அப்பில் நவீனக் குமரி நீ, ஐய்யோ எனக்கென்ன பைத்தியம் முற்றிவிட்டதோ, வழக்கத்துக்கு மாறாக உளறுகிறேன்.
மிக நீண்ட நாள் கழித்து உன் ஸ்டோரியைப் பார்த்தேன். அது இவ்வாறு சொல்கிறது `பச்சோந்தி, you need a hug.
02.04.2022
சனிக்கிழமை
Friday, April 1, 2022
வெண்தாடிக்குள் ஸ்மைல் செய்யும் நரேந்திர மோடி
நீடித்த நட்பு எவ்வளவு அசாத்தியமானதோ அதேபோல்தான் ஷங்கரிடமிருந்து கருத்தை அறிந்துகொள்வதும். அவ்வளவு எளிதாக எதற்கும் உடனடியாக எதிர்வினையாற்ற மாட்டார். முதலில் மனிதர்களைப் படிப்பார் ; அவர்களின் பண்பு நலன்களை, நடத்தையை, பழகும் விதத்தை, அவர்களின் கருத்தியலை இப்படியான படிநிலைகளில் தேறியவர்களிடம்தான் நட்பு பாராட்டுவார். இது அவரின் பலம் மட்டுமல்ல ; அவரே அறிந்த பலவீனமும்கூட. எனக்கும் அவருக்குமான நட்பு சண்டையில்தான் ஆரம்பித்தது. அவரிடமிருக்கும் அறம், கசடுகளைச் சற்றென்று களைந்தெடுத்துவிட்டு பேரன்பைப் பொழிய ஆரம்பிக்கும். அந்த அறம்தான் எங்களின் உறவைக் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறது.
பேச்சுக்குரலில் நவீனப் பட்டினப்பாலை `கபால நகரம்’ பச்சோந்தியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பென்று நினைக்கிறேன். அவருடைய முதல் தொகுப்பு, ‘வே...

-
என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...
-
நேற்று மாலை சிவராஜ் பாரதியும் நானும் அலுவலகத்தில் உரையாடிக்கொண்டிருந்தோம். வரவேற்பரையில் கரகரத்த குரல் ஒலித்தது. யாரென்று பார்த்தேன். புத்...
-
பேச்சுக்குரலில் நவீனப் பட்டினப்பாலை `கபால நகரம்’ பச்சோந்தியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பென்று நினைக்கிறேன். அவருடைய முதல் தொகுப்பு, ‘வே...