51A பேருந்திலிருந்து தண்டீஸ்வரத்தில் இறங்கினேன். லதா சூப்பர் மார்க்கெட் எதிரில் நின்றபடி பேன்ட் பாக்கெட்டிலிருந்து செல்போனை எடுத்த போது, இரண்டு தவறிய அழைப்புகள் இருந்தன. ஒன்று மனைவியிடமிருந்து ; மற்றொன்று நண்பர் நவீனிடமிருந்து. முதலில் மனைவியை அழைத்து என்ன வாங்கி வரவேண்டும் என்றேன். ஒன்றும் வேண்டாம், வந்துவிட்டீர்களா என்று கேட்கத்தான் அழைத்தேன் என்றார். பஜ்ஜி, வடை எதுவும் வேண்டுமா என்றால், சாப்பிடும் நேரத்தில் எதற்கென்று சொல்லிவிட்டார். எதிரில் நடைவண்டியில் பலாவிலிருந்து சுளைகளைப் பிரித்து அதன் முனை நீக்கியதைக் கண்டதும், பலாச்சுளை வாங்கி வரவா என்றேன் ம்ம்... வாங்கி வாங்க இதையெல்லாம் கேட்டிட்டு இருக்கீங்க என்றார். கடைக்கு அருகில் சென்று ஒரு கூறு 20 ரூபாய் என்பதை அறிந்துகொண்டு, 30 ரூபாய்க்குக் கொடுங்க என்றேன். என் அருகில் நின்றவர் 100 ரூபாய்க்கு வாங்கிச் சென்றார். சரி, நம்ம ஒரு ஐம்பது ரூபாய்க்காவது வாங்கலாம் என்று 1/4 கிலோ வாங்கி வந்தேன். மகள் பழங்கள் சாப்பிடமாட்டாள். அவளுக்கு என்ன வாங்கலாம் என்று யோசிக்கையில் பேரீச்சம் பழம் நினைவுக்கு வந்தது. பழங்களில் இது ஒன்றைத்தான் சாப்பிடுவாள்.
Wednesday, March 16, 2022
கண்ணாடியில் ஒளிந்த பிம்பம்
Tuesday, March 15, 2022
The Great Lifco Dictionary
கடந்த செவ்வாய்க்கிழமை அலுவலகம் முடிந்து வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தேன். பேருந்து கிண்டியை அடைந்த போது அழைத்த மனைவி, வரும் போது Lifco Dictionary வாங்கி வரும்படி கூறினார். தண்டீஸ்வரத்தில் உள்ள இந்தியன் புத்தகக் கடையில் Lifco அகராதி இல்லையென்று சொல்லிவிட்டார்கள். சரி நாளை வாங்கிக் கொள்ளலாம் என்று வீட்டில் சொல்லிவிட்டேன். மறுநாள் தேவி திரையரங்கப் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிச் சாலையைக் கடந்து எதிர்த் திசையில் சென்றுகொண்டிருந்தேன். பெரும்பாலும் நடைமேடைப் புத்தக் கடையை வேடிக்கை பார்த்த படிதான் செல்வேன். இக்கடை தேவி திரையரங்க நுழைவாயிலுக்கு முன்பு வலது பக்கத்தில் இ.எல்.எஸ் புத்தகக் கடைக்கு அருகில் நடைமேடை மீது அமைந்துள்ளது. கடைக்காரர் ஒரு பெண்மணியிடம் பேசிக்கொண்டிருந்தார். அவர் பேச்சுக்குள் நுழைந்து Lifco அகராதி இருக்கிறதா என்றேன். இருக்கிறது என்பது போல் தலையசைத்தார். பேச்சை சற்று நேரம் தொடர்ந்த படி இருந்ததால், ஐயா அகராதி இருக்கிறதா என்று மீண்டும் கேட்டேன். அவர்கள் இருவரும் தீவிரமாகப் பேசியதைக் கண்டு அமைதியுற்றேன். ``என்ன செய்வது எல்லாம் அவரவருக்கே தெரியணும்'' என்றபடி விடைபெற்றனர்.
Friend Request ஐ எப்போது Accept செய்வாய் தோழி!
கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியத்திற்கும் மேல் அலுவலகம் வந்திருந்தேன். குதிரைவால் வசனகர்த்தாவான ராஜேஷ் அழைத்து `Parellel Mothers' படத்திற்கு ஒரு டிக்கெட் இருக்கிறது நீங்க போக முடியுமா என்றார். ``சாயங்காலம் சீக்கிரம் வந்து எங்களைப் பூங்காவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்'' என்ற மகளின் கட்டளையை எண்ணியபடி யோசித்தேன். என்னங்கய்யா படம் பார்க்க யோசிக்கிறீங்க என்றார். சரி போகிறேன் என்றதும் வாட்ஸ் அப்பில் டிக்கெட் அனுப்பினார். நன்றி என்றேன். நட்புக்குள் இந்த நன்றியெல்லாம் வேண்டாம், ஃப்ரீயா விடுங்க என்றார். `ஃப்ரீயா விடுங்க' என்னும் சொற்கள் தோழி ஒருத்தியை ஞாபகப்படுத்தின.
Sunday, March 13, 2022
நவீனக் கவிதையின் திரைமொழி - குதிரைவால்
மார்ச் 12 அன்று குதிரைவால் திரைப்படம் பார்க்க அப்படத்தின் இணை இயக்குநர் அரவிந்தன் அழைத்திருந்தார். இதற்கு முன்பு ஓர் நாள் சாலிக்கிராமம் பிரசாத் லேப்பில் எழுத்தாளர்களுக்காக ஒரு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக நண்பர் தமிழ் அழைத்திருந்தார். அன்று நீலம் இதழ், பிரின்ட் அனுப்புவதற்கான இறுதிக்கட்டப் பணிகளால் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. எனவே, மீண்டும் ஒரு வாய்ப்புக் கிடைப்பதைத் தவறவி
திரையரங்கின் முன்னே வண்டியை நிறுத்திவிட்டு உள் நுழைந்தோம். மூன்றாவது மாடியின் வரவேற்பறையில் மூன்று பேர் நின்றிருந்தனர். அவர்களில் ஒருவர் இயக்குநர் என்றும் மற்றொருவர் ரைட்டர் என்றும் அறிமுகப்படுத்திச் சிறு தண்ணீர் போத்தலைக் கொடுத்து வரவேற்றனர். எங்களுக்குப் பின் ஆனந்த் குமரேசன் சக கலைஞர்களுடன் நின்றிருந்தார். ஆனந்த் குமரேசன் குரு நானக் கல்லூரியில் கணிதம் படித்தவர். எனக்கு சீனியர். அது 2002 - 2005. பின்பு, 2011 ஆம் ஆண்டில் ரஷ்யன் கலாச்சார மையத்தில் நடைபெற்ற எஸ்.ராவின் உலக இலக்கியப் பேருரையில் சந்தித்துப் பேசினேன். ஆனால், உன்னைக் கல்லூரியில் பார்த்ததே இல்லையே என்னும் பாவனைதான் அப்போது அவருக்கு இருந்தது. இப்போதும் அந்த மனநிலைதான் இருக்கிறது. சிற்சில சமயங்களில் மிகவும் அன்போடும் பழகியிருக்கிறார். தேவி திரையரங்கில் `பூலோகம்' திரைப்படத்தை இருவரும் கண்டு ரசித்திருக்கிறோம். ஒரு கலைஞன் அரசியல் கூர்மையுள்ளவனாய் நிலைபெறுவது அவசியம் என்பது அன்றைய சந்திப்பின் சாரமாக இருந்தது. கடுமையான வாசிப்பையும் திரைத்துறை சார்ந்து நுட்பமான பார்வையும் கொண்டவர். எதையும் கட்டுடைக்க வேண்டும் என்கிற மீறலைக் கல்லூரிக் காலத்திலிருந்து இப்போது வரை தக்கவைத்திருக்கும் கலைஞர்.
Saturday, March 12, 2022
நெடிதுயர்ந்தது மரங்கள் மட்டுமல்ல
சமீபத்தில் ஶ்ரீநேசனின் `கவிஞயம்' கட்டுரைத் தொகுப்பினைப் படித்தேன். அதில், `இஸ்ரேலியம்' கவிதை நூலுக்கான கட்டுரை `அறிவியலும் அரசியலும் குழந்தைகளும்' என்னும் தலைப்பில் இடம் பெற்றிருந்தது. பிரமிளின் புகழ் பெற்றக் கவிதையான E = mc², அறிவியலைப் புராணிகத்துடன் இணைத்து தத்துவமாகக் கண்ட புதிய அறிவியல் கவிதை என்றும் பிரம்மராஜனின் மொழிபெயர்ப்புக் கவிதைகளை அறிவியலின் தாக்கம் கொண்ட பரிசோதனைத்தன்மை வாய்ந்தவை என்றும் குறிப்பிட்டிருந்தார். இதன் தொடர்ச்சிதான் பாம்பாட்டிச் சித்தனின் இஸ்ரேலியம் என்கிறார் ஶ்ரீநேசன். முன் பகுதியில் இடம் பெற்றிருப்பதாய்ச் சொன்ன தனிம அட்டவணை என்னைப் பள்ளிப் பருவத்திற்கு அழைத்துச் சென்றது. வேதியியல் பாடத்தில் படித்தது இன்னும் நினைவிருக்கிறது. உடனே படிக்க வேண்டும் என்கிற உந்துதலுக்கு இதுவும் ஒரு காரணம். கூகுளில் தேடினேன், out of stock என்று வரவே நேரிடையாக புது எழுத்து மனோன் மணியத்திற்கு அழைத்து என்.டி.ராஜ்குமார் நூல்களுடன் இஸ்ரேலியத்தையும் அனுப்பும்படி கூறினேன். அவரும் கைவசமில்லை என்றார். நண்பர்களிடம் கேட்டிருந்தேன், அவர்களிடமும் இல்லை. அறிவியல் புனைவு சிறப்பிதழ் `மீ' கொண்டுவருவது குறித்து ஒருமுறை பிரவீண் பஃறுளி பேசிக்கொண்டிருக்கும் போது பாம்பாட்டிச் சித்தனின் இஸ்ரேலியம் பற்றிப் பேசியது நினைவில் எழுந்தது. அவரிடம் நேற்று மாலை கேட்டிருந்தேன். நாளை காலை கல்லூரி வரும் போது எடுத்து வருகிறேன் என்று சொல்லியிருந்தார்.
Tuesday, March 8, 2022
Need A Job! - By Poet Pacho
அனைவருக்கும் வணக்கம்!
2020 ஆண்டு ஜூன் மாதம் விகடனில் பணி நீக்கம் செய்யப்பட்டதை அனைவரும் அறிவீர்கள். அப்போதிருந்து கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறேன். அரண் செய், நீலம் ஊடகங்களில் கிடைத்த வேலை கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. ஆனாலும் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப இயலவில்லை. மாதத்தின் பாதி நாட்களை நண்பர்களின் உதவியால் நகர்த்திக்கொண்டிருக்கிறேன். தொடர்ந்து நண்பர்களிடம் பொருளாதார உதவியை நாடுவது குற்றவுணர்வாக இருக்கிறது. கடன் வாங்கிய வங்கியில் இருந்து தொடர்ந்து வீட்டுக்கு வந்து செல்கிறார்கள். பள்ளி திறந்த பிறகுதான் மீண்டும் மனைவி மக்களைச் சென்னைக்கு அழைத்து வந்திருக்கிறேன். வங்கியில் இருந்து பணம் கேட்டு வருவதால் என்னை விட வீட்டில் உள்ளவர்கள் உளரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால், உங்களிடம் நான் கேட்டுக்கொள்வது குறைந்த பட்சம் 35,000 இல் இருந்து 40,000 வரை சம்பளம் கிடைக்குமாறு ஏதேனும் ஊடகத்தில் பணிசெய்ய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள் என்கிற கோரிக்கைதான். கணையாழி, வம்சி, ஆனந்த விகடன், நீலம் (தற்போது வரை) ஆகிய ஊடகங்களில் உதவி ஆசிரியராகப் பணி புரிந்துள்ளேன். கிட்டத்தட்ட ஊடகத்துறையில் 10 ஆண்டு கால அனுபவம் உள்ளவன். என்னைப் பற்றி, என் வேலையைப் பற்றி நான் பணிபுரிந்த ஊடகங்களில் கேட்டு அறிந்துகொள்ளலாம். அப்படி அறியும் பட்சத்தில் அது உங்களுக்கும் எனக்கும் உதவியாக இருக்கும். என் மீது அன்பு கொண்டவர்கள் ஏராளமானவர்கள் உண்டு என்பதை நன்கு அறிவேன். உங்களில் யாராவது இந்த உதவியைச் செய்தால் மிகவும் நன்றிக்குரியவனாக இருப்பேன். என்னுடைய வளர்ச்சியில் முகநூலுக்கும் முகநூல் நண்பர்களுக்கும் இன்றியமையாத பங்குண்டு. என்னை மேலும் வளர்த்தெடுங்கள் ; மேலும் உற்சாகப்படுத்துங்கள் ; மேலும் கைகொடுங்கள் என்பதை இதன் வாயிலாகக் கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் எதிர்காலத்தில் தமிழின் மகத்தான கலைஞர்களில் நானும் ஒருவனாக இருப்பேன். மகத்தானதை நோக்கிச் செல்லுமிந்த இளைஞனை மீட்பது உங்களின் கடமையும்கூட அல்லவா.
குறிப்பு :
பண உதவி செய்கிறேன் என்று எனது எண்ணுக்கு அழைப்பதை அல்லது உள் பெட்டிக்குச் செய்திகள் அனுப்புவதைத் துளியும் விரும்ப மாட்டேன். எங்கு சென்றாலும் துயர்மிகு காலத்தில் கைகொடுத்த, கைகொடுக்கும் அரண் செய், நீலம் ஊடகங்களையும் அதில் பணிபுரியும் நண்பர்களையும் என்றும் மறவாது இருப்பேன்.
09.03.2022
புதன்கிழமை
Sunday, March 6, 2022
எப்போதும் கொஞ்ச முடியாது மகளே!
கீழறையில் செஸ் விளையாடிக்கொண்டிருந்தேன். வெளியிலிருந்து அழைத்தாள் மகள். என்னம்மா என்றேன். அம்மா உங்களை அழைப்பது கேட்கவில்லையா. நானும் எத்தனை தடவைக் கூப்பிடுறேன் என்றாள் கொஞ்சம் ஆக்ரோசமாக. அம்மா என்னை அழைத்தது கேட்கவில்லை. சரி இப்படி ஆங்காரமாய் ஆவது எதற்கு. மிக இயல்பாக இருக்கச் சொல்லி எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன் என்றதும். அம்மா கூப்பிட்டாங்க என்று அமைதியாகச் சொன்னாள். மிகவும் இக்கட்டான சூழலில் பாதியிலேயே ஆட்டத்தை முடித்துவிட்டுச் செல்ல முடியாதல்லவா. வருகிறேன் போம்மா என்று சொல்லி அவள் கதவைச் சாத்திச் செல்வதைப் பார்த்துக்கொண்டே யானையை நகர்த்திச் சிப்பாயை வெட்டிவிட்டேன். அதற்கு நேராக இருந்த எதிராளியின் யானை எஞ்சியிருந்த ஒற்றை யானையையும் வெட்டிவிட்டது. நான் செய்த தவறுக்கு மகள்தான் காரணமெனச் சற்றென்று கோபம் வந்தது. கோபத்தின் முன்னே கதவைத் திறந்துகொண்டு பெரிய பப்பாளிப் பழத்துண்டுடன் வந்தாள். பொசுக்கென்று நமந்துவிட்டது கோபம். பழச் சுவையைச் சுவைத்தபடி ஆடினேன். பாதி தூரம் வந்திருந்த சிப்பாயை நகர்த்தி ராணியாக்கிவிட்டான். படையற்ற என் ராஜா எதிராளியின் இரண்டு யானைகளோடும் புதிதாகப் பதவியேற்ற ராணியோடும் கடுமையாகப் போராடித் தோற்றது.
பேச்சுக்குரலில் நவீனப் பட்டினப்பாலை `கபால நகரம்’ பச்சோந்தியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பென்று நினைக்கிறேன். அவருடைய முதல் தொகுப்பு, ‘வே...
-
Pinterest நேற்று மாலை அலுவலகம் முடிந்ததும் நண்பர் செந்தில்குமாரைச் சந்திக்கச் சென்றேன். இவர் திருவல்லிக்கேணியில் உள்ள பைகிராஃப்ட் சாலை நடைமே...
-
பேச்சுக்குரலில் நவீனப் பட்டினப்பாலை `கபால நகரம்’ பச்சோந்தியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பென்று நினைக்கிறேன். அவருடைய முதல் தொகுப்பு, ‘வே...
-
நேற்று இரவு கீழறைக்கு உறங்கச் சென்றேன். பிள்ளைகளில் யாராவது ஒருவரை உங்களுடன் அழைத்துச் செல்லலாம் அல்லவா. காலையில் இருந்து கூடவே இருக்காங்க, ...