கடந்த செவ்வாய்க்கிழமை அலுவலகம் முடிந்து வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தேன். பேருந்து கிண்டியை அடைந்த போது அழைத்த மனைவி, வரும் போது Lifco Dictionary வாங்கி வரும்படி கூறினார். தண்டீஸ்வரத்தில் உள்ள இந்தியன் புத்தகக் கடையில் Lifco அகராதி இல்லையென்று சொல்லிவிட்டார்கள். சரி நாளை வாங்கிக் கொள்ளலாம் என்று வீட்டில் சொல்லிவிட்டேன். மறுநாள் தேவி திரையரங்கப் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிச் சாலையைக் கடந்து எதிர்த் திசையில் சென்றுகொண்டிருந்தேன். பெரும்பாலும் நடைமேடைப் புத்தக் கடையை வேடிக்கை பார்த்த படிதான் செல்வேன். இக்கடை தேவி திரையரங்க நுழைவாயிலுக்கு முன்பு வலது பக்கத்தில் இ.எல்.எஸ் புத்தகக் கடைக்கு அருகில் நடைமேடை மீது அமைந்துள்ளது. கடைக்காரர் ஒரு பெண்மணியிடம் பேசிக்கொண்டிருந்தார். அவர் பேச்சுக்குள் நுழைந்து Lifco அகராதி இருக்கிறதா என்றேன். இருக்கிறது என்பது போல் தலையசைத்தார். பேச்சை சற்று நேரம் தொடர்ந்த படி இருந்ததால், ஐயா அகராதி இருக்கிறதா என்று மீண்டும் கேட்டேன். அவர்கள் இருவரும் தீவிரமாகப் பேசியதைக் கண்டு அமைதியுற்றேன். ``என்ன செய்வது எல்லாம் அவரவருக்கே தெரியணும்'' என்றபடி விடைபெற்றனர்.
Tuesday, March 15, 2022
The Great Lifco Dictionary
புத்தகங்கள் அடுக்கிவைத்திருந்த மேசைக்கு அடியில் குனிந்து தடித்த நூல் ஒன்றை எடுத்துத் தூசி தட்டிக்கொடுத்தார். நீல நிறத்தின் மேல் மஞ்சள் பூக்கள் பூத்திருந்த Spine பக்கத்தில் வெள்ளைத்தாள் ஒட்டியிருந்தது. அதன்மீது `The Great Lifco Dictionary' என்று எழுதப்பட்டிருந்தது. பழுப்பு நிறப் பக்கங்கள் என்னை வசீகரித்தன. பக்கங்கள் அனைத்திலும் தண்ணீர் பட்டது போன்ற கறை படர்ந்திருந்தது. ஒரே ஒரு பக்கம் மட்டும் பாதி கிழிந்த அகராதியின் விலையைக் கேட்டேன். 200 ரூபாய் என்றார். விலை கொஞ்சம் குறைக்க வாய்ப்பிருக்கிறதா என்றேன். இல்லைங்க அய்யா, பக்கங்கள் அதிகமுள்ளது. படிக்க அருமையாக இருக்கும் என்றார். கையில் பணம் இல்லை. அண்ணா திரையரங்கின் வாசலில் இருந்த ஏடிஎம்மைக் காண்பித்து, இருங்க பணம் எடுத்து வருகிறேன் என்றேன். ஏன் அவ்வளவு தூரம், இதோ பக்கத்தில் இருக்கிறது என்று இன்னொரு ஏடிஎம்மைக் காண்பித்தார். கல்லூரி படிக்கும் போது ஒரு புது Lifco அகராதி வாங்கியிருந்தேன். அது இப்போது கிழிந்துவிட்டது. சில பக்கங்கள் தொலைந்துவிட்டன. கிழிந்ததை ஒட்ட வைக்கலாம்; தொலைந்ததை மீட்க முடியாது. முடியாததை முயன்று முயன்று ஏன் இருப்பதையும் தொலைக்க வேண்டும். இப்போது ஒன்றே ஒன்றுதான். கிழிந்துவிடாமல் கனத்த பழுப்பு நிறப் பக்கங்களை வீட்டில் சேர்க்க வேண்டும்.
16.03.2022
புதன்கிழமை
Subscribe to:
Post Comments (Atom)
பேச்சுக்குரலில் நவீனப் பட்டினப்பாலை `கபால நகரம்’ பச்சோந்தியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பென்று நினைக்கிறேன். அவருடைய முதல் தொகுப்பு, ‘வே...
-
என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...
-
பேச்சுக்குரலில் நவீனப் பட்டினப்பாலை `கபால நகரம்’ பச்சோந்தியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பென்று நினைக்கிறேன். அவருடைய முதல் தொகுப்பு, ‘வே...
-
அறிவியல் புனைவுகளின் மேல் தீரா மோகம் ஏற்பட்டுள்ளது. அறிவியல் புனைவு புரியவேண்டுமென்றால் அறிவியல் என்றால் என்ன என்கிற அடிப்படைப் புரிதல் வே...
No comments:
Post a Comment