Monday, May 30, 2022
பத்ரியன் மலர்ச் சந்தையைப் பற்றவைத்தேன்
நடனமற்றுத் தரையிறங்கும் ஆகாயம்
கோவிந்தப்ப நாயக்கர் தெருவில் நடந்துகொண்டிருந்தேன்.
இடிந்து நொறுங்கிய வீட்டின் எஞ்சிய சுவர்
வேர்களால் வேயப்பட்டிருந்தது.
அதன் மீது சாய்ந்திருக்கிறது
ஒரு முனை உடைந்த மூங்கில் ஏணி.
வெட்டுத் தழும்புகளுடன் நின்றிருக்கும் அரச மரத்தின்
பாதி உடைந்த கிளை
அக்கினி வெய்யிலில் எரிகிறது.
அந்த நெருப்பில் சுருட்டைப் பற்றவைக்கிறான்
வாயற்ற வயோதிகன்.
சுருள் சுருளாய் மேகங்கள் சஞ்சரிக்கையில்தான்
தொண்டையில் மடித்துவைத்திருந்த உதடுகள்
எட்டிப் பார்த்தன.
பழக்கூடையில் ஊன்றிய குடை
காற்றில் சாயாதபடி
கண்ணாடி வளையல்கள் இறுக்கிப் பிடிக்க
மற்றோர் கையின் வளையலோசை
பலாச் சுளைகள் மீது அமர்ந்த ஈக்களை விரட்டுகிறது.
நடனமற்ற அரசின் பழுத்த இலை
ஆகாயத்தைத் தரையிறக்கும் பொழுதில்
ரத்தக்கறை படிந்த லுங்கியொன்று
நடைமேடை மீது தூங்கித் தூங்கி வழிகிறது.
சிலையாய் நிற்கும் ஜார்ஜ் மன்னன்
சுட்டாலும் பாதத்தை மட்டும் நகர்த்தாமல்
மண்டையைக் கழட்டிக் கிரீடத்தைச் சொரிகிறான்.
Saturday, April 23, 2022
போலிகளை எதிர்கொள்வதுதான் பெரும் சவால்
நேற்று மாலை வேளச்சேரியிலிருந்து சென்னைப் பல்கலைக்கழகம் சென்றுகொண்டிருந்தேன். மனைவி `இளங்கலை தமிழ் இலக்கியம்' படிக்கிறாள். ஆன்லைன் தேர்வு நடைபெறுவதால், தேர்வுத்தாளைச் சமர்ப்பிக்கத்தான் இப்பயணம்.
Thursday, April 21, 2022
பலகீனங்களின் மேல் சவாரி செய்யும் சமூகத்தில்
Wednesday, April 20, 2022
பற்றி எரியும் அப்பாவின் கனவு!
தம்மைப் போல் பண்ணையடிமையாய்த் தம் பிள்ளைகளும் வாழ்ந்திடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் அப்பா. மேலும், எல்லா பிள்ளைகள் மீதும் ஒருவித வெறுப்பைத் தொடர்ந்து காட்டி வந்தார். இதனால், இரண்டு விசயங்கள் நடந்தன. ஒன்று வெறுப்பைத் தாங்காமல் ஊரை விட்டுப் பிள்ளைகள் ஓடுவது ; மற்றொன்று படிப்பு என்கிற சொல்லில் விடுதியில் சேர்த்து விடுவது. மூத்த அண்ணன் முதல் ரகம் ; இளைய அண்ணன் இரண்டாம் ரகம். ஆனால், தம் பிள்ளைகள் பெரிய ஆளாக வர வேண்டும் என்கிற கனவை மூட்டையாய்ச் சுமந்தபடியே இருந்தார். அக்கனவு எதுவென்று சுட்டுவிரல் நீட்டவோ, அக்கனவை நோக்கிக் கைக்கூட்டி அழைத்துச் செல்லவோ, அக்கனவைச் சொற்களால் விளக்கவோ அவரால் இயலவில்லை. ஆனால், தீராக் கனவு அதிகாலைச் சூரியனைப் போல் சுடர்விட்டுக்கொண்டே இருந்தது.
Tuesday, April 19, 2022
உடைந்த வளையல் வானத்தின் கீழ்...
பேச்சுக்குரலில் நவீனப் பட்டினப்பாலை `கபால நகரம்’ பச்சோந்தியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பென்று நினைக்கிறேன். அவருடைய முதல் தொகுப்பு, ‘வே...






