Tuesday, April 27, 2021

மற்றமையைப் பூட்டாதிரு

 


மற்றமையைப் பூட்டாதிரு

கடற்கரையை ஒருபோதும் பூட்ட முடியாது
பூட்ட முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும்
நீதான் தலைகுனிந்து நிற்கிறாய்
சதா ஒவ்வோர் அலையும்
திறந்துகொண்டே இருக்கிறதல்லவா
சலிப்பற்று 
நீ பூட்டிக்கொண்டே இருக்கிறாய்
தொய்வற்று
தன்னைத் திறந்துகொண்டே இருக்கிறது
தன்னைத் தானே திறத்தல்தான்
ஞானம் எனப்படுகிறது
தன்னைத் தானே திறத்தல்தான்
அறிதல் எனப்படுகிறது
தன்னைத் தானே திறத்தல்தான்
திறத்தல்  எனப்படுகிறது
சரி அதற்கு என்ன செய்ய வேண்டும்
மற்றமையைப் பூட்டாதிரு போதும்

- பச்சோந்தி

2 comments:

  1. பூட்டுதலும் திறத்தலுமற்ற வாழ்வில் என்ன இருந்துவிடப் போகிறது. எதையும் நம் விருப்பத்திற்கு திறக்க முடியாது. திறந்து கொள்வது எதுவும் தானாக திறந்து கொள்வதுதான். அருமை பச்சோந்தி.

    ReplyDelete
  2. நன்றி நட்சத்திரா

    ReplyDelete

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...